ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)
அந்த நாட்களில் ஹடகேஸ்வரம் ஒரு அடர்ந்த காடாக இருந்தது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு முற்றிலும் இருட்டாகவும் அமைதியாகவும் இருக்கும். மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட இடமானதால் , கரடி, புலிகள் மற்றும் விஷ பாம்புகள் போன்ற வன விலங்குகள் இரவில் சுதந்திரமாக அங்கு சுற்றித் திரியும் . காட்டில் வாழ்ந்த பழங்குடியினர் கூட சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வெளியே வர மாட்டார்கள் . எங்கள் பணி நேரம் காரணமாக, மாலை நேரங்களில் மட்டுமே சுவாமிஜியின் தரிசனம் எங்களுக்கு சாத்தியமானது. சுவாமிஜியின் தரிசனம் முடிந்த பிறகு, நாங்கள் ப்ராஜெக்ட் காலனியை அடைய காட்டில் நடந்து செல்ல வேண்டியிருந்தது. 1969 இல் சுவாமிஜியின் தரிசனம் செய்தவர்களில் ஒருவர் சுவாமி ரங்கய்யா. சில சமயங்களில், நாங்கள் அவரது ஜீப்பில் வீட்டிற்கு திரும்பி செல்வோம்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஒரு மாலை, நான் ஹடகேஸ்வர ஆசிரமத்தில் இருந்தபோது, புதர்களில் இருந்து ஒரு சத்தம் கேட்டது, புதர்களில் இருந்து ஒரு கரடி போன்ற நிழல் வெளியே வருவதைக் கண்டேன். அருகில் வந்ததும், அது ஒரு மனிதர் என்பதை உணர்ந்தேன். அவர் நிர்வாணமாக இருந்தார், நீண்ட நகங்கள் மற்றும் சடை பிடித்த ஜடாமுடியுடன் காணப்பட்டார் . அவர் நேராக சுவாமிஜியை பார்த்து நடந்து சென்றார் . அவரை பார்த்துக்கொண்டு அமர்ந்தார். சுவாமிஜியும் அந்த மனிதனைப் பார்த்துக் கொண்டிருந்தார் . சில மணி நேரங்கள் கடந்தும் , அவர்களுக்கு இடையே எந்த உரையாடலும் இல்லை. இந்த நிகழ்வை எனது நண்பர்கள் அனைவரும் காண வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் உடனடியாக சுண்டிபெண்டாவிற்கு சென்று அந்த அவதூதரை பற்றி அவர்களுக்கு தெரிவித்தேன். இருப்பினும், அதே நேரத்தில் அங்கு ஆலங்கட்டி மழை பெய்ததால் அவர்களால் ஹடகேஸ்வரத்திற்கு செல்ல முடியவில்லை. மழை தணிந்த பிறகு, நான் மீண்டும் ஆசிரமத்திற்கு சென்றேன். மறுநாள் காலையில் அந்த அவதூதர் காட்டுக்குள் சென்று விட்டார் . காவியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, அவதூதர்கள் காடுகளில் தங்கியிருப்பதை பற்றி மட்டுமே கேள்வி பட்டிருதேன் , ஆனால் ஒரு போதும் பார்த்ததில்லை. அந்த நாள், சுவாமிஜியின் ஆசீர்வாதம் காரணமாக, அந்த அவதூதரை பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு அவதூதர் சுவாமிஜியிடம் வந்தார் . அவர் முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு இருக்கும் .அவர் சுவாமிஜியின் ஆசிரமத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டு , இந்த உலகத்திலேயே இல்லாதது போல் தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருப்பார் , என்னுடன், வேறு சில பக்தர்களுக்கும் இந்த அவதூதரின் தரிசனம் கிடைத்தது . நூற்றுக்கணக்கான சிவப்பு மலை எறும்புகள் அவரது உடலெங்கும் ஊர்ந்து கொண்டிருக்கும் , ஆனால் அவர் தொடர்ந்து சிரித்து கொண்டிருப்பார் , எறும்புகளை பற்றி கவலைப்படாமல் . அவர் சிறிது காலம் சுவாமிஜியின் அருகாமையில் இருந்து விட்டு சென்று விட்டார் . அவர் ஆசிரமத்திற்கு வந்த பிறகு தான் நாங்கள் அவரைப் பார்ப்போம் , ஆனால் அவர் வருவதையும் போவதையும் கவனித்ததில்லை . இதே போல், ஒரு முறை ஒரு யோகினியும் சுவாமிஜியின் தரிசனத்திற்காக வந்தார்கள் .
சுவாமிஜி ஜகன்மாதாவின் உண்மையான ஸ்வரூபம் என்று அறிவித்த அவர், சுவாமிஜியிடம் மிகுந்த பக்தியுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளுமாறு எச்சரித்தார்.
தண்ணீர் சுத்தமாக இருந்ததால் சுவாமிஜி எப்போதும் பாலதாராவுக்குத் குளிக்கச் செல்லுவார் . 1969 ஆம் ஆண்டில், கஜானன் மகராஜ் என்ற சாது பாலதாரா அருகே தியானம் செய்து கொண்டிருப்பார் . தத்தா பக்தராக இருந்த அவர், தவம் செய்வதற்காக கிர்னாரில் இருந்து ஸ்ரீசைலம் வந்திருந்தார் . அவருக்கு சுவாமிஜி பற்றி நல்ல கருத்து இல்லை, அடிக்கடி கேலி செய்வார், ”அவர் ஏன் எப்போதும் பக்தர்களால் சூழப்பட்டிருக்கிறார்? அவர்களில், குறிப்பாக பி.ஆர்.கே எப்போதும் அவருடன் நெருக்கமாக இருக்கிறார் ”என்று கூறுவார் . ஒரு நாள் சுவாமிஜி குளிக்கச் சென்றபோது, கஜானன் மகராஜை ஒரு பாம்பு கடித்திருப்பதை கவனித்தார். சுவாமிஜி உடனடியாக சாதுவை அவரது தோள்களில் தூக்கி கொண்டு , படிக்கட்டு வழியாக சுமந்துக் கொண்டு வந்தார் . மேலே வந்ததும் , அந்த சாதுவை சுவாமி ரங்கய்யாவிடம் ஒப்படைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். சுவாமிஜி பாம்புக் கடியைத் தொட்ட மாத்திரத்தில் , ரத்தத்திற்கு பதிலாக, சாதுவின் உடலில் இருந்து தண்ணீர் வரத் தொடங்கியது. சாதுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் இது ஒரு ஆச்சரியமாக இருந்தது.
அந்த சாது குணமடைந்த பிறகும், சுவாமிஜி அவருக்கு நிறைய சேவை செய்தார். சுவாமிஜி தனது கட்டிலை சாதுவுக்கு கொடுத்துவிட்டு அவர் தரையில் தூங்கினார்.
சுவாமிஜி அவரிடம் காட்டிய கருணையை கண்டு, கண்ணீர் மல்க கஜனான் மகராஜ் கூறினார் , “நான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன் சுவாமி! உங்களைப் பற்றி எனக்கு நல்ல கருத்து இருக்கவில்லை”. அதன்பிறகு பாலதாராவில் சிறிது காலம் தங்கி விட்டு அவர் காட்டுக்குள் திரும்பி சென்று விட்டார் . நாங்கள் அவரை மீண்டும் பார்க்க வில்லை.
சுவாமிஜி ஒவ்வொரு மனிதன் மீதும் பொழியும் இரக்கத்தையும் கருணையையும் காட்ட இது ஒரு எடுத்துக்காட்டு, அவரை அவதூறாக பேசுபவர்கள் மீதும் கூட.
தொடரும்...
🙏🙏🙏