top of page
Writer's pictureSriswamypoornananda.org

|| யத்தோ வச்சோ நிவர்தந்தே || - 10

ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)

பெரிய சாதுக்களின் வாழ்க்கை வரலாறுகள் எப்போதும் அசாதாரணமாகவும் வியக்கத்தக்க மாதிரியும் இருக்கும் . அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமும் எதையாவது போதிக்கிறது, அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு தீப பந்தம் போல் செயல்படுகிறது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது புதிதாக ஒன்றை கற்று கொள்ளலாம் . ஒரு பெரிய துறவியின் கதையை நாம் எத்தனை முறை படித்தாலும், அது நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே தருகிறது, அதற்கு வேறொன்றும் ஈடாகாது.

 


தெய்வாம்சம் பொருந்திய ஸ்ரீ பூர்னானந்த சுவாமி 1969 இல் ஹடகேஸ்வரத்திற்கு வந்தார், அவருடைய ஆசிர்வாதத்தால் , சிலருக்கு அவரது தரிசனம் கிடைக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது . சுவாமிஜியின் அருகாமையில் இருந்து , அவருடைய சக்திகளை கண் கூட பார்த்ததால் , அவரைப் பற்றி மேலும் அறிய ஆர்வமாக இருந்தோம். அவர் யார்? அவருடைய பெற்றோர் யார்? அவரது குரு யார்? அவர் என்ன படித்தார்? என்ற பல கேள்விகள் நம் மனதில் மிதந்தன. ஆனால் சுவாமிஜியை விசாரிக்கும் தைரியம் எங்களுக்கு ஒரு போதும் இல்லை . சில நேரங்களில் சுவாமிஜி மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தபோது, ​​நாங்கள் நுட்பமாக சில விவரங்களைக் கேட்போம். பெரும்பாலும், எங்கள் ஆர்வத்தை பார்த்து , ​​சுவாமிஜியே சில விவரங்களை கூறுவார்.

சுவாமிஜி 1939 இல் மதுரையில் பிறந்தார், அவருக்கு ஸ்ரீ காமேஸ்வரன் என்று பெயரிடப்பட்டது. இவரது தாய் பர்வதவர்தினி, தந்தை ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காரு . அவர் தனது ஆரம்ப கல்வியை சாத்தூர் என்ற சிறிய கிராமத்தில் பெற்றார். அவரது முழு குடும்பமும் மிகவும் அறிவாற்றல் கொண்டது . மற்றும் அவரது தந்தை ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரி காரு அவர்களே சுவாமிஜியின் முதல் குரு.

சுவாமிஜி தனது சிறுவயது சம்பவங்கள் பலவற்றை என்னிடம் விவரித்தார், நான் அனைத்தையும் எழுதி கொண்டேன் . அத்தகைய தெய்வீக ஆன்மாவைப் பற்றிய கதைகளைக் கேட்டபின், இதெல்லாம் உண்மையா என்று யோசித்து தூக்கமில்லாமல் பல இரவுகளை கழித்தேன். சுவாமிஜி விவரித்த அனைத்தையும் என் கண்களால் பார்க்க விரும்பினேன். உடனே, நான் வேலையில் இருந்து ஒரு மாத விடுப்புக்கு விண்ணப்பித்தேன், நான் ஒரு பயிற்சியில் கலந்துகொள்கிறேன் என்று என் குடும்பத்தினரிடம் பொய் சொன்னேன், தமிழகத்திற்கு செல்ல தயாராக இருந்தேன். நந்திகோட்குரு ராஜு காருவும் என்னுடன் வர முன்வந்தார். மெட்ராஸை அடைய, நாங்கள் ஓங்கோலில் இருந்து ரயில் ஏற வேண்டியிருந்தது, ஸ்ரீசைலத்திலிருந்து பெங்களூருக்கு செல்லும் ஒரு பஸ் ஓங்கோலில் நிற்கும் . நாங்கள் புறப்படுவதற்கு முன்பு சுவாமிஜியின் தரிசனம் செய்ய விரும்பினோம், அப்போது மதியம் சுமார் 12 மணி .நாங்கள் ஹடகேஸ்வரத்தில் பஸ் ஏறுவோம் என்று பஸ் டிரைவருக்கு . எங்கள் பஸ் 2 மணிக்கு . சுவாமிஜிக்கு முன், எங்கள் தலையை குனித்து கொண்டு தரையை நோக்கி கொண்டு , நாங்கள் சுவாமிஜியிடம் பொய் சொன்னோம், “சுவாமிஜி, விசாகப்பட்டினத்தில் எங்களுக்கு சில விவசாய நிலங்கள் உள்ளன, இது அறுவடைக்கான நேரம். நாங்கள் ஒரு மாதத்தில் திரும்புவோம்” என்றோம் . அதற்கு சுவாமிஜி, “நீங்கள் போகலாம், ஆனால் உங்களுக்கு மொழி பிரச்சினை இருக்கும் . உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நான் உங்களுக்கு வழிகாட்டியாக வருகிறேன்” என்றார் . உலகில் உள்ள எவரிடமும் வேண்டுமானாலும் நாம் பொய் சொல்லலாம், ஆனால் சுவாமிஜி நம் மனதில் உள்ளதை அறிவார் . உடனே, நான் சுவாமிஜிக்கு முன் சிரம் பணிந்து, “சுவாமிஜியின் வாழ்க்கை கதையை பற்றி நாங்கள் மேலும் தெரிந்து கொள்ள தான் போகிறோம்” என்றேன். “ஆட்சேபனை இல்லை, நான் வழிகாட்டியாக வருவேன். நான் உங்களுக்கு உதவுவேன், அவ்வளவுதான்! ”, என்று சுவாமிஜி பதிலளித்தார்.

மகிழ்ச்சியுடன் சுவாமிஜி உடனடியாக எங்களுடன் புறப்படத் தயாரானார். சுவாமிஜி வெறும் கௌபீனம் மற்றுமே அணிதிருந்ததால் நான் என் பையில் இருந்து ஒரு பட்டுத் துணியை எடுத்து சுவாமிஜிக்கு அணிவித்தேன் . நந்திகோட்குரு ராஜு காருவும் நானும் சுவாமிஜியுடன் சேர்ந்து எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் ஓங்கோலில் பஸ்ஸில் ஏறியதில் இருந்து , ஒரு மாதிரியான மாயா சக்திக்கு உட்பட்டார் போல, நான் சுவாமிஜியுடன் மிகவும் நட்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன். அவரும் அதே வழியில் எங்களுடன் மிக்க நட்போடு கலந்து பழகழானார் . சுவாமிஜி எங்கள் சாமான்களை தூக்கிக் கொண்டு சென்றபோதும், அதை தடுக்க நாங்கள் முயலவில்லை . சுவாமிஜி அப்போது ஒருவனுக்கு எது ஒன்றும் நடக்க வேண்டும் என்றால் விதி மற்றும் நல்ல அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்று கூறினார். நான் சுவாமிஜியின் கருத்துக்களை எதிர்த்தேன், ”சுவாமிஜி அதிர்ஷ்டம் என்று எதுவும் இல்லை! பணமே பரமாத்மா , ஒருவனிடம் பணம் இருந்தால், அவன் அதிர்ஷ்டசாலி ஆகிவிடுகிறான் . காபி சாப்பிட கூட நாம் பணம் குடுக்க வேண்டாமா? ”, என்று அதிகம் யோசிக்காமல் அனைத்தையும் அறிந்தவன் போல் பேசினேன். இறுதியில், சுவாமிஜி கேட்டார், "நீ அதை அனுபவிக்க விரும்புகிறாயா ?"என்று . நான் ஒப்புக்கொள்கிறேன் என்றேன் . பின்னர் அவர், “அதற்கு நீ தயாரா?” என்று கேட்டார். எனது பயணத்தின் நோக்கமே அது தான் என்று பதிலளித்தேன்.

அந்த மாத பயண செலவுக்காக நான் ரூ .700 ஐ என்னுடன் எடுத்துச் சென்றேன்.பணம் திருடு போகாமல் எச்சரிக்கையாக இருக்க, பணத்தை சிறிய சிறிய முடுச்சுகளாக வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்திருந்தேன் . இதற்கிடையில் ஒரு பிச்சைக்காரர் சுவாமிஜியை அணுகி, “சுவாமி!” என்றார். சுவாமிஜி என்னை பார்த்து பிச்சைக்காரரிடம் பணம் கொடுக்க சொன்னார். நான் ஒரு நாணயம் கொடுக்கவிருந்தபோது, ​​சுவாமிஜி, “ நாணயம் அல்ல, ருபாய் நோட்டை கொடு” என்று சொன்னார், பின்னர் அவரே என் சட்டை பாக்கெட்டில் இருந்து நான் வைத்திருந்த பணத்தையெல்லாம் எடுத்து கொடுத்தார். மிகுந்த மகிழ்ச்சியடைந்த பிச்சைக்காரன் பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினான். நாங்கள் ஒரு சாதாரண பயணிகள் ரயிலில் பயணித்ததால் , ​​அது ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நின்று சென்றது . ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இருந்த அனைத்து பிச்சைக்காரர்களுக்கும் ரூ .700 ரூபாய் முழுவதையும் சுவாமிஜி தானமாக வழங்கி விட்டார். சுவாமிஜி எனக்கு உறுதியளித்தார், “எதுவும் நடக்காது. நான் இருக்கிறேன் அல்லவா ? நான் பார்த்துக் கொள்வேன் ”. என்னிடத்தில் பணமே இருக்கவில்லை.

ரயில் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நின்றது. பெட்டியில் துர்நாற்றம் வீசியதால் கீழே இறங்குமாறு சுவாமிஜி பரிந்துரைத்தார். எங்கள் டிக்கெட்டுகள் மெட்ராஸ் வரை வாங்கிருந்ததால் நாம் இறங்க கூடாது என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் சுவாமிஜி ரயிலில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தார், ராஜு காருவும் அவரை பின்தொடர்ந்தார். நான் பின்னால் வருகிறேனா என்று சுவாமிஜி திரும்பி கூட பார்க்கவில்லை , நான் பின்னால் விட்டுவிடப்படுவேன் என்று கவலைப்பட தொடங்கினேன் . இதற்கிடையில், ரயில் நகரத் தொடங்கியது. என்னிடம் பணம் இல்லை, அவர் கவனித்துக்கொள்வார் என்று எனக்கு உறுதியளித்த சுவாமிஜி இப்போது அதி வேகமாக நடந்து கொண்டிருந்தார் . எனக்கு வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்த நான் நகரும் ரயிலில் இருந்து குதித்தேன். சக பயணிகளிடம் எனது சாமான்களை கொடுக்கும் படி கேட்டேன். நான்கு பைகளில், அவர் இரண்டு பைகளை கொடுத்து விட்டு , மற்ற இரண்டு பைகளை காணவில்லை என்று கூறினார். எல்லா பணமும், பாதி உடமைகளும் போய்விட்டதால், நான் மிகவும் நொந்து விட்டேன் . சுவாமிஜியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க நான் கான்கிரீட் கற்கள் மீது வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அந்த கற்களில் பட்டு என் செருப்பு கிழிந்தது. இந்த வழியில், என் பணம் எல்லாம் போய் இரண்டு பைகளை சுமந்துகொண்டு, சுவாமிஜி என்னை விட்டு விட்டு சென்று விடுவார் என்ற கவலையுடன் வெறும் கால்களுடன் வேகமாக அவரை பின் தொடர்தேன்.

சில மணிநேரங்களுக்கு முன்புதான், சுவாமிஜியுடன் விதி என்று எதுவும் இல்லை என்றும் பணம் தான் எல்லாம் என்றும் வாதிட்டேன். சுவாமிஜி இப்போது அவரது வாழ்க்கை கதையுடன், அதிர்ஷ்டம் மற்றும் விதியின் முக்கியத்துவத்தை எனக்குக் காட்டவிருந்தார். நான் சுவாமிஜியை சோதிக்க எண்ணினேன், ஆனால் நான் இப்போது அவரிடமிருந்து மிக பெரிய சோதனையை எதிர் நோக்கி இருந்தேன்.
 

தொடரும்

59 views2 comments

2 Comments


Dhiwan Bhadhur
May 02, 2020

பழகழானார் என்று இருக்கு, பழகலானார் என்று எழுத்து பிழை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.


Like

Dhiwan Bhadhur
May 02, 2020

Guruve sarannam Jai Gurudev

Like
bottom of page